விளையாட்டு

பிசிசிஐ ஆலோசனை குழுவிலிருந்து சாந்தா ரங்கசாமி விலகல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழு(சிஏசி) உறுப் பினர் பதவியை முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் சாந்தா ரங்கசாமி ராஜினாமா செய் துள்ளார்.

பிசிசிஐ நியமித்துள்ள சிஏசி குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் உறுப்பினர்களாக உள் ளனர். மேலும் சாந்தா ரங்க சாமி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) இயக்கு நராகவும் இருந்தார்.

இந்நிலையில் இந்த 2 பதவி யையும் ராஜினாமா செய்வதாக அவர் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு இமெயில் மூலமாக கடிதம் அனுப் பியுள்ளார். கபில்தேவ், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழுதான் ரவிசாஸ்திரியை மீண் டும் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்தது.

இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினிடம் புகார் அளித் துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து வரும் 10-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மூன்று பேருக்கும் டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்தே தனது பதவியை சாந்தா ரங்கசாமி ராஜி னாமா செய்துள்ளார். பிடிஐ

SCROLL FOR NEXT