லண்டன், ஏ.எஃப்.பி.
கடந்த 2 ஆண்டுகளில் 6 முறை வேகவரம்பை மீறி வாகனம் ஓட்டியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஆஸி. ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் இனி 12 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் ஜாகுவார் காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிய ஷேன் வார்ன் மணிக்கு 64 கிமீ வேகத்தைத் தாண்டி இயக்கியுள்ளதை மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டிடம் ஒப்புக் கொண்டார்.
மேற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் ஷேன் வார்ன் 1845 பவுண்டுகள் அபராதம் செலுத்த உத்தரவிரப்பட்டுள்ளது, அதாவது 3,000 டாலர்கள்.
கடந்த 2016 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 முறை வேகவரம்பை மீறியதாக கோர்ட் இவரை குற்றம்சாட்டியது.
இதனையடுத்து அடுத்த 12 மாதங்களுக்கு அவர் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.