படம். | கே.ஆர்.தீபக் 
விளையாட்டு

அனைத்து வடிவங்களிலும் 50 ரன்களைக் கடந்த சராசரி: விராட் கோலிக்கு ஷாகித் அஃப்ரீடி புகழாரம்

செய்திப்பிரிவு

தொடர்ந்து உலகக் கிரிக்கெட் ரசிகர்களை தன் அபாரமான பேட்டிங்கினால் இந்திய கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி வாழ்த்தியதோடு புகழாரம் சூட்டியுள்ளார்.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விரட் கோலி நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி போட்டியில் சாதித்தார். 52 பந்துகளில் 72 ரன்களை விளாசி முதல் வெறறியை உறுதி செய்தார். இதில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும்.

இந்நிலையில் விராட் கோலியைப் பாராட்டி ஷாகித் அஃப்ரீடி தன் ட்விட்டரில்,

“வாழ்த்துக்கள் விராட் கோலி, நீங்கள் உண்மையில் கிரேட் பிளேயர்தான், தொடர்ந்து இப்படியே ஆட ஆசைப்படுகிறேன். உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை நீங்கள் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி தற்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2441 ரன்களுடன் உள்ளார், ரோஹித் சர்மா 2434 ரன்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 53.14
ஒரு நாள் கிரிக்கெட்டில் 60.31,
டி20 யில் 50.85

என்ற சராசரிகளுடன் 3 வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் கூடுதலாக சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான்.

SCROLL FOR NEXT