விளையாட்டு

என்னுடன் ஒப்பிடும் போது  கடின சூழலில் 5 பவுண்டரிகளை அடிக்கக் கூடியவர் ரிஷப் பந்த்: விராட் கோலி

செய்திப்பிரிவு

ரிஷப் பந்த் ஓரிருமுறை முதல் பந்தில் ஆட்டமிழந்தார் என்பதற்காக பேட்டிங் பற்றிய அவரது அணுகுமுறையை மாற்றத் தேவையில்லை, ஆனால் சூழ்நிலையை கொஞ்சம் சிந்தித்து ஆடுவது முக்கியம் என்று கேப்டன் விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

“எதிர்பார்ப்பு என்பது சூழ்நிலைக் கணிப்பதாகும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படி அவர் ஆட வேண்டும் என்று நினைக்கவில்லை. சூழ்நிலையை ஆராய்ந்து அவருக்கு எது சிறந்த வழி என்று படுகிறதோ அதை செயல்படுத்துவதாகும்.

ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் என்னை ஒப்பிடும்போது கடினமான சூழ்நிலையில் 5 பவுண்டரிகளை விளாசக் கூடியவர், நான் ஒன்று, இரண்டு என்று வேகமாக ஓடி கடினச் சூழலை கடக்க முயல்வேன். ஆகவே அவரவருக்கு அவரவர் ஆட்டம்.

ஆனால் சூழ்நிலையைக் கணித்து ஆட வேண்டும் என்பதே வீரர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது, நான் உட்பட.

நான் அணிக்குள் வரும்போது ஏதோ 15 வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதல்ல அதிகபட்சம் 5 வாய்ப்புகள்தான் அதற்குள் நாம் நம்மை நிறுவிக் கொள்ள வேண்டும். அந்த உயர்ந்த மட்டத்தில் தான் நாம் ஆடிவருகிறோம்” என்றார் கோலி.

SCROLL FOR NEXT