110 சிசி திறன் கொண்ட புதிய ஸ்கூட்டரை சுசூகி நிறுவனம் சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. ஜப்பான் சுசூகி மோட்டார் காப்பரேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான இந்திய சுசூகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், புதிதாக 110 சிசி திறன் கொண்ட லெட்ஸ் ஸ்கூட்டரை சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று அறிமுகப்படுத்தியது.
சுசூகி நிறுவனத்தின் தலைவர் இசிரோ கொண்டோ, துணைத் தலைவர் அதுல் குப்தா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தனர்.
விழாவில் அதுல் குப்தா பேசுகையில், “இந்த புதிய ஸ்கூட்டர் இந்திய நகர இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் எரிபொருள் சிக்கனத்திற்கு உகந்தது” என்றார்.
லெட்ஸ் ஸ்கூட்டர் 5 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இதன் விலை ரூ.46,925 ஆகும்.