இந்திய வீராங்கனை  யாஷ்அஸ்வினி தேஸ்வால் : கோப்புப்படம் 
விளையாட்டு

இந்தியாவுக்கு 3-வது தங்கம்: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் யாஷ்அஸ்வினி அபாரம்: 9-வது ஒலிம்பிக் கோட்டா

செய்திப்பிரிவு

ரியோ டி ஜெனிரோ,

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்துவரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தேஸ்வால் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் 9-வது வீராங்கனை எனும் பெருமையை யாஷ்அஸ்வினி பெற்றார். ஏற்கெனவே தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற நிலையில் இப்போது அதே 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அஸ்வின் தங்கம் வென்றுள்ளார்.

22 வயதான முன்னாள் ஜூனியர் உலகக் கோப்பை சாம்பியனான அஸ்வினி 236.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரும் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கோஸ்டெவ்ச் 234.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், செர்பியாவின் ஜாஸ்மினா மிலாவோனோவிக் 215.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கோஸ்டெப்யெச்சை 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை அஸ்வினி கைப்பற்றியுள்ளார்.

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை துப்பாக்கிச் சூடுதலில் 9 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ரியோ டி ஜெனிராவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பெறும் 3-வது தங்கம் இதுவாகும். இதற்கு முன் அபிஷேக் வர்மா, இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற நிலையில் இப்போது அஸ்வின் வென்றுள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT