தோல்வி அதிர்ச்சியில் சிமோனா ஹாலப். 
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலப் அதிர்ச்சி தோல்வி

செய்திப்பிரிவு

நியூயார்க்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிருக் கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங் கனையான சிமோனா ஹாலப், பெட்ரா விட்டோவா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷ்யா வின் டேனியல் மேத்வதேவ் 6-3, 7-5, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் பொலிவியாவின் ஹியூகோ டெலியினையும், 6-ம் நிலை வீரரான ஜெர்மனி யின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-3, 3-6, 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்செஸ் தியோஃபோவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் தனது 2-வது சுற்றில், ஆஸ்திரேலியாவின் தனசி கொக்கினாகிஸை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. ஆனால் தனசி கொக்கினாகிஸ் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, பெல்ஜியத்தின் டேவிட் கோபின், பிரான்ஸின் கெல் மோன் பில்ஸ், அமெரிக்காவின் ஜான் இஸ்நர் ஆகியோ ரும் 3-வது சுற்றில் கால் பதித்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் போலந்தின் மெக்டா லிநெட்டையும், 7-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யா வின் அனஸ்டசியா பாவ்லிசென் கோவாவை யும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

அதேவேளையில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-2, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் 116-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதேபோல் 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 4-6, 4-6 என்ற நேர் செட்டில் 88-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் அன்ட்ரியா பெட்கோவிச்சிடம் வீழ்ந்தார்.

இந்திய ஜோடி தோல்வி

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல்சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், மோனாக்கோவின் ஹிகோ ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ராபர்ட் கார்பலேஸ், அர்ஜென்டினாவின் பெடரிகோ டெல்போனிஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

SCROLL FOR NEXT