விளையாட்டு

ரோஹித் சர்மாவை டெஸ்ட்டில் விளையாடும் லெவனில் சேர்க்க வேண்டும்: ஷோயப் அக்தர் ஆதரவு

செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணியில் அவரைத் தேர்வு செய்து விட்டு ஆடாமல் உட்கார வைப்பது தவறு என்றார் அக்தர்.

தன்னுடைய யூடியூப் சேனலில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

முன்பு ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் லெவனில் இடம் கிடைத்ததை அறிவேன். ஆனால் அவரால் வாய்ப்பை இறுகப் பற்ற முடியவில்லை. ஆனால் அவர் இம்முறை அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

அவர் பெரிய மேட்ச் வின்னர், அவரை சேர்க்காமல் இருந்தால் அது தவறு. அவர் நல்ல பார்மில் இருக்கிறார் எனவே அவர் ஆட வேண்டும். ரோஹித் சர்மா டெஸ்ட்டிலும் கிரேட் பிளேயராக வரக்கூடிய திறமை படைத்தவர்.

உலகக்கோப்பைப் பின்னடைவிலிருந்து இந்திய அணி நன்றாக மீண்டு வந்துள்ளது, மே.இ.தீவுகளை டி20, ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. நன்றாக ஆடி வருகின்றனர் இந்திய அணியினர்.

இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.

-ஐ.ஏ.என்.எஸ்.

SCROLL FOR NEXT