படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

இந்திய பெண்னை மணந்தார் பாக். கிரிக்கெட் வீரர்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷமியாவை இன்று திருமணம் செய்துக்கொண்டார்.

துபாயில் நடந்த இந்த திருமண நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹசன் அலி திருமணம் செய்து கொண்டுள்ள ஷமியா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் . இங்கிலாந்தில் பொறியியல் படித்தவரான ஷமியா தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஷாமியாவின் பெற்றோர் துபாயில் வசிக்கின்றனர்.

அசன் அலியின் திருமணத்துக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மோதல் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்திய பெண் ஷமியாவை திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT