விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உதவி பயிற்சியாளராக அதிரடி வீரர்

செய்திப்பிரிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவிப் பயிற்சியாளராக அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்கிறார். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்னமும் வீரராக சில தனியார் டி20 கிரிக்கெட்டில் ஆடிவந்தார் ஆனால் சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் அவர் ஓய்வு அறிவித்தார்.

கரீபியன் பிரிமியர் லீக் டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் பொறுப்பேற்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2008-ல் ஆடும் போது 158 ரன்கள் எடுத்து அலறவிட்டார். இது தொடக்க போட்டியாகவும் அமைந்ததால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு கிராண்ட்கலா தொடக்கமாக இது அமைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கெனவே தலைமைப் பயிற்சியாளர் ஜாக் காலிஸ், சைமன் கேடிச்சிடமிருந்து விடைபெற்றது.

கேகேஆர் அணிக்காக அவர் 5 சீசன்கள் ஆடினார், 2009-ல் அணியை வழிநடத்தினார். இந்நிலையில் அவர் கொல்கத்தா அணியின் உதவிப்பயிற்சியாளர் ஆகிறார்.

SCROLL FOR NEXT