விளையாட்டு

2-வது ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி

செய்திப்பிரிவு

பெங்களூருவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந் தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

நியூஸிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி பெங்களூ ருவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதல் பேட் செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருஷ் காமினி மட்டும் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். இதில், 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அதற்கு அடுத்த படியாக ஹர்மன் பிரீத் கவுர் 31 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தரப்பில் பேட்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிய இலக்கை விரட்டிய நியூஸி லாந்து 46 ரன்களில் மூன்று விக்கெட் டுகளை இழந்தது. இந்தியாவின் ராஜேஸ்வரி தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால், சட்டர்த்வெய்ட் (23), டேவின் (33), பெர்கின்ஸ் (30) பொறுப்பாக விளையாடி அணியை பாதுகாப்பான நிலைக்கு இட்டுச் சென்றனர். இறுதியில் 44.2 ஓவர் களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து வெற்றி பெற்றது. காஸ்பெரக் 17 ரன்களுடனும், அன்னா 23 ரன்களுட னும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் கோஸ்வாமி, ஏக்தா பிஸ்ட், ராஜேஸ்வரி கெய்க் வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டு களை வீழ்த்தினர். அடுத்த போட்டி நாளை நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT