வார்னரை எல்.பி (தவறான தீர்ப்பு) யில் வீழ்த்திய பிராட். | கெட்டி இமேஜஸ். 
விளையாட்டு

இங்கி. தவறவிட்ட ரிவியூவால் பிழைத்த வார்னர் தான் தவறவிட்ட ரிவியூவினால் அவுட்: ஆஷஸ் டெஸ்ட்டில் அதிர்ச்சித் தொடக்கம்

செய்திப்பிரிவு

பால் டேம்பரிங் தடைகளுக்குப் பிறகு முதன் முதலில் ‘ஹை பிரஷர்’ ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் போட்டியில் ஆடிய டேவிட் வார்னர் 2 ரன்களில் பிராட் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவெனில் பிராட் ரவுண்ட் த விக்கெட்டில் தன் முதல் பந்தை வீச தன் முதல் பந்தை எதிர்கொண்ட வார்னர் லெக் திசையில் சென்ற பந்தை ஆட முயல அது விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிடம் சென்றது, அவர் கேட்ச் என்று சீரியஸாக அப்பீல் செய்தார். ஆனால் மற்றவர்கள் ஒத்துழைப்பு இல்லை. 

அதனால் ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ரீப்ளேயில் அது மட்டையின் விளிம்பில் பட்டுச் சென்றதாகக் காட்டியது, ஆகவே டக் அவுட்டில் வெளியேறியிருக்க வேண்டிய வார்னர் தப்பிப் பிழைத்தார். மிகப்பெரிய ஆஷச் லைஃப். 

ஆனால் இந்த அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 4வது ஓவரை மீண்டும் பிராட் வீச 5வது பந்து மீண்டும் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசப்பட லெக் ஸ்டம்ப் லைன் பந்தை கால்காப்பில் வாங்கினார் வார்னர். 

மிகப்பெரிய அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் மிகத்தவறான தீர்ப்பு. இதனை ரிவியூ செய்யாமல் வார்னர் தன்பாட்டுக்கு வெளியேறினார். ஆனால் ரீப்ளேயில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்தப் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பெரிய அளவில் சென்றது.  இது நாட் அவுட். ரிவியூ செய்யப்படாமல் வார்னர் பெவிலியன் சென்றார், முதலில் அவுட் அதில் இங்கிலாந்து ரிவியூ செய்யாமல் விட்டது. ஆஷஸ் தொடரின் ஆரம்பமே ருசிகரமாக அமைந்தது.

ஆஸ்திரேலிய அணி வார்னர், பேங்கிராப்ட் ஆகியோரை இழந்து 17/2 என்று திண்டாடி வருகிறது, ஸ்மித், கவாஜா ஆடி வருகின்றனர், இரண்டு விக்கெட்டுகளையுமே பிராட் வீழ்த்தினார். 

SCROLL FOR NEXT