கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ஆடும் பிக் ஹிட்டிங் பேட்ஸ்மேனான ஷெர்பான் ருதர்போர்ட் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், அதே வேளியில் மும்பை இந்தியன்ஸ் தன் லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டேயை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தாரை வார்த்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ருதர்போர்ட் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்பிடல்ஸ் அணி ருதர்போர்டை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஒரேயொரு போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிராக 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய ருதர்போர்ட் தன் வேகப்பந்து வீச்சினால் ஏ.பி.டிவில்லியர்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2019-ல் லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டே 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். தற்போது இவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மூத்த ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, சந்தீப் லாமிச்சானே, ராகுல் த்வேத்தியாவுடன் இணைகிறார்.