விளையாட்டு

சிந்து விலகல்

செய்திப்பிரிவு

பாங்காங் 

தாய்லாந்து ஓபனில் இருந்து பி.வி.சிந்து விலகியுள்ளார்.

பாங்காங் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் தகுதி சுற்று ஆட்டங்களுடன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட் டிருந்தது. பிரதான சுற்று இன்று தொடங்க உள்ள நிலையில் இந்தத் தொடரில் இருந்து பி.வி.சிந்து விலகியுள்ளார்.

தாய்லாந்து ஓபனில் சிந்து விலகியுள்ள நிலையில் 7-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் இன்று களமிறங்க உள்ளார். காயம் காரணமாக கடந்த இரு தொடர்களிலும் சாய்னா நெவால் விளையாடவில்லை. இதனால் அவர், மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் முதல் சுற்றில் சாய்னா நெவால், 67-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பிட்டாயபார்ன் சைவானுடன் மோதுகிறார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான சாய் உத்தேஜிதா ராவ் சுக்கா தனது முதல் சுற்றில் சீனாவின் சென் ஜியாவோவுடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT