விளையாட்டு

பெங்களூரை பந்தாடிய பஞ்சாப்: 32 ரன்களில் வெற்றி

செய்திப்பிரிவு

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பஞ்சாபின் துவக்க வீரர்கள் சேவக் மற்றும் மந்தீப் சிங் இருவரும், அதிரடி ஆட்டத்துடன் ஆரம்பித்தனர். மந்தீப் சிங் 15 பந்துகளில் 21 ரன்களுக்கும், சேவாக் 24 பந்துகளில் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

வழக்கம் போல களத்தில் இணைந்த மில்லர் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி, தங்களது முந்தைய ஆட்டங்களின் விளாசலை மீண்டும் வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மேக்ஸ்வெல்லின் அதிரடி வெகு நேரம் நீடிக்கவில்லை. 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது சஹாலின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

சென்ற போட்டியில் அசத்தலாக ஆடிய பெய்லி, 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த மில்லர் இன்று மேக்ஸ்வெல்லின் பணியை எடுத்துக் கொண்டார். 23 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த அவர், 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்களை எட்டினார்.

ஆரோன் பந்துவீச்சில் சஹால் பிடித்த அபாரமான கேட்ச்சினால் மில்லர் வெளியேறினார். இதற்குப் பின் பஞ்சாப் அணியின் ஸ்கோர் சேர்க்கும் வேகம் கணிசமாகக் குறைந்தாலும், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 198 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

SCROLL FOR NEXT