சுனில் கவாஸ்கர், விராட்கோலி : கோப்புப்படம் 
விளையாட்டு

கோலி கேப்டனாக நீடிப்பது அவரது விருப்பமா, அணித் தேர்வாளர்கள் விருப்பமா?- சுனில் கவாஸ்கர் சாடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி,
இந்திய அணியில் கேப்டனாக நீடிப்பது கோலியின் விருப்பமா அல்லது அணியின் தேர்வுக்குழுவின்விருப்பமா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மிட் டே நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: 

எனக்குத் தெரிந்தவரை உலகக் கோப்பைப் போட்டி வரை மட்டும்தான் இந்திய அணிக்கு விராட்கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், மேற்கிந்தி்யத்தீவுகள் தொடருக்கும் விராட் கோலி கேப்டனாக தொடர்கிறார்கள்.

விராட் கோலி கேப்டனாகத் தொடர்வது குறித்த எந்தவிதமான கூட்டமும், ஆலோசனையும் நடத்தாமல் தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விராட் கோலி கேப்டனாக அணிக்கு தொடர்வது அவரின் விருப்பதின் அடிப்படையில் இருக்கிறதா அல்லது தேர்வுக்குழுவின் விருப்பத்தின் அடிப்படையில் கோலி தொடர்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் கோலியை கேப்டனாக நியமித்து இருக்கிறோம் என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி சொல்வதற்கு தேர்வுக்குழுவினருக்கு 5 நிமிடம் கூட கிடைக்கவில்லையா?

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு செல்லும் இந்திய அணிக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளுக்கும் கோலியை கேப்டனாக தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் நியமித்துள்ளார். 
உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாட்டையும் ஆய்வு செய்யமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு தெரிவித்து, மேலாளர் அறிக்கையை மட்டுமே கணக்கில் எடுப்போம் எனத் தெரிவித்துவிட்டது. 

கோலி கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்ட பின்புதான் , தேர்வுக்குழுவின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு, மே.இ.தீவுகள் தொடருக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களைத் தேர்வு செய்வதில் கருத்தை கேட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த அடிப்படையில் அவரைத் தேர்வுக்குழுவினர் அழைத்தார்கள். 
உலகக் கோப்பைத் தொடரில் கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் எதிர்பார்த்த அளவு சிறப்பாகச்செயல்படவில்லை என்று அவர்களை அணியில் இருந்து தேர்வுக்குழுவினர் நீக்கிவிட்டார்கள். ஆனால், இறுதிப்போட்டிவரை செல்லும் இந்தியஅணி நாங்கள் எதிர்பார்த்த நிலையில், அணி பைனலுக்கு செல்லவில்லை எது எங்கள் எதிர்பார்புக்கு குறைவாக இருக்கிறதே அப்படியென்றால் கேப்டன் கோலி மீது என்ன நடவடிக்கை எடுப்பது?
இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT