விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸி. அணி அறிவிப்பு: அணியில் ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட்  ‘மூவர்’ கூட்டணி 

செய்திப்பிரிவு

ஆஷஸ் தொடர் என்று அழைக்கப்படும் பிரபல ஆஸ்திரேலியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸி. புகழ் கெடுத்த பால்டேம்பரிங் மூவர் கூட்டணியான ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். 

டிம் பெய்ன் விக்கெட் கீப்பர், கேப்டன் என்றாலும் மேத்யூ வேடும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பையில் கலக்கிய அலெக்ஸ் கேரி ஒதுக்கப்பட்டுள்ளதை ஆஸி. ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. 

அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்சன் பேர்ட், கிறிஸ் ட்ரெமெய்ன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோரும் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. அதே போல் ஸ்பின்னர் ஜோன் ஹாலண்டும் பரிசீலிக்கப்படவில்லை, மாறாக லபுஷேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆஷஸ் தொர்டருக்கான ஆஸி. அணி வருமாறு:

டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் பேங்கிராப்ட், பாட்ரிக் கமின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நீசர், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.

SCROLL FOR NEXT