விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் ஏமாற்றியதாக பெண்கள் புகார்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் அணியின் இளம் கிரிகெட் வீரர் இமாம் உல் ஹக் காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண்கள் பலர் அவர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும், பாகிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரருமான இமாம் உல் ஹக் தங்களைக் காதலித்து ஏமாற்றியதாக 8 பெண்கள் கூறியுள்ளனர். 

இது தொடர்பான தகவலை அமாம் என்ற ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்தப் பெண்கள் இமாம் உல் ஹக்கிடம் நடத்திய உரையாடலை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள  உரையாடலில் இமாம் உல் ஹக் அந்தப் பெண்களிடம் காதலிப்பதைப் போல் பேசி, அவர்களின் புகைப்படங்களையும் கேட்டுள்ளார். பின்னர் நான் காதலிக்கிறேன். ஆனால்,  என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இமாம் கூறிய பதில்களும் அதில்  உள்ளன.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இமானுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 
இந்தக் குற்றச்சாட்டுக்கு இமாம் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. 

SCROLL FOR NEXT