விளையாட்டு

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் சாய் பிரணீத்

செய்திப்பிரிவு

டோக்கியோ

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொட ரில் இந்தியாவின் சாய்பிரணீத் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 23-ம் நிலை வீரரான இந்தியாவின் சாய் பிரணீத், 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடினார். சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய் பிரணீத் 21-17, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான ஜப்பானின் சுனேயாமாவை எதிர்கொள்கிறார் சாய் பிரணீத்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மர்வின் ஷீடல், லிண்டா எஃப்லர் ஜோடியை தோற்கடித்தது. அதேவேளையில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 12-21, 16-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் கோஹ் ஸ்ஸே, நூர் இசுதீன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன் றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனா வின் ஹன் யூ-வை எதிர்கொள் கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், தனது சக நாட்டைச் சேர்ந்த 31-ம் நிலை வீரரான ஹெச்எஸ் பிரனோயை சந்திக்கிறார். - பிடிஐ

SCROLL FOR NEXT