ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அசைக்க முடியாத முதலிடத்தைத் தக்க வைத்தார். கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும் செடேஷ்வர் புஜாரா 3ம் இடத்திலும் உள்ளனர்.
விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வில்லியம்சன் 913 புள்ளிகள், புஜாரா 881 புள்ளிகள்.
அணிகள் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1, நியூஸிலாந்து 2ம் இடம், தென் ஆப்பிரிக்கா 3ம் இடம், இங்கிலாந்து 4ம் இடம், ஆஸ்திரேலியா 5ம் இடம் பிடித்துள்ளன.
டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் மட்டுமே டாப் 10-ல் இருக்கின்றனர். ஜடேஜா 6ம் இடத்திலும் அஸ்வின் 10ம் இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் பாட்கமின்ஸ் நம்பர் 1 இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா 3ம் இடத்தில் இருக்கிறார். ஜேசன் ஹோல்டர் முதலிடம், ஷாகிப் அல் ஹசன் 2ம் இடம். 4ம் இடத்தில் பென் ஸ்டோக்ஸ், 5ம் இடத்தில் வெர்னன் பிலாண்டர், 6ம் இடத்தில் அஸ்வின்.