விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மே.இ.தீவுகள் அணிக்கு ஐபிஎல் வீரர்கள் இருவர் அழைப்பு

செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளுகு எதிராக இந்திய அணி விளையாடும் டி20 தொடருக்காக மே.இ.தீவுகள் அணியில் ஐபிஎல் கிரிக்கெட்டில் புகழ்பெற்ற இரண்டு மே.இ.தீவுகள் வீரர்கள் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடிக்கும் சிக்கன ஆஃப் ஸ்பின்னுக்கும் பெயர் பெற்ற சுனில் நரைன், மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிரன்பொலார்ட் ஆகியோர் மே.இ.தீவுகள் அணியில்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை அறிமுகம் ஆகாத விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ஆண்டனி பிராம்பிள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உடற்தகுதி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆந்த்ரே ரஸலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்த டி20 அணிக்கு கார்லோஸ் பிராத்வெய்ட் கேப்டனாக இருப்பார்.

அணி விவரம்:

கார்லோஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), ஆண்டனி பிராம்பிள், ஜான் கேம்பெல், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரன் ஹெட்மையர், எவின் லூயிஸ், சுனில் நரைன், கீமோ பால், கேரி பியர், கிரன் பொலார்ட், நிகோலஸ் பூரன், ரோவ்மன் போவெல், ஆந்த்ரே ரஸல், ஒஷேன் தாமஸ்

SCROLL FOR NEXT