இந்திய வீராங்கனை பி.வி.சிந்து : கோப்புப்படம் 
விளையாட்டு

இந்தோனேஷிய பாட்மிண்டன்: வெள்ளியோடு விடைபெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

செய்திப்பிரிவு

ஜகார்த்தா பிடிஐ

இந்தோனேஷிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தோடு விடைபெற்றார்.

ஜகார்த்தாவில்  இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்துவந்தது. மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனையும் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்துவை

4-ஆம் நிலை வீராங்கனையையும், ஜப்பானைச் சேர்ந்தவருமான அகேன் எமகுச்சி எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை எமகுச்சியிடம் 15-21, 16-21 என்ற நேர் செட்களில் போராடி வீழ்ந்து வெள்ளி வென்றார் பி.வி.சிந்து.

ஒரு கட்டத்தில் எமகுச்சியைக் காட்டிலும் 10-4 என்ற கணக்கில் சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால், எமகுச்சி அபராமான முன்கை ஆட்டத்தையும், பிளேஸ்களையும் வெளிப்படுத்தி எளிதில் சிந்துவை வீழ்த்தினார்.

ஏற்கனவே இந்த ஆண்டு சிங்கப்பூர் ஓபன், இந்தியா ஓபனில் அரையிறுதிவரை சென்ற சிந்து தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT