விளையாட்டு

சூப்பர் ஓவரில் காரைக்குடி வெற்றி

செய்திப்பிரிவு

 திண்டுக்கல் 

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. கேப்டன் அனிருதா 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். சீனிவாசன் 37, பாஃப்னா 30 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் சரவண் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

172 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் சேர்க்க ஆட்டம் டை ஆனது. முரளி விஜய் 56 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து வெற் றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி சுனில் சாம் வீசிய ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. கனபதி சந்திரசேகர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.

முரளி விஜய் 5 பந்துகளை சந்தித்து 11 ரன் எடுத்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய காரைக்குடி அணி, அனிருதா விளாசிய இரு சிக்ஸர்களால் 4 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த ஓவரை சாய் கிஷோர் வீசியிருந்தார்.

SCROLL FOR NEXT