மோர்கன், கேன் வில்லியம்சன். 
விளையாட்டு

உலகக்கோப்பையை இப்படி வென்றது நியாயமாகாது: இயான் மோர்கன் வருத்தம்

செய்திப்பிரிவு

2019 உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து முதன் முதலில் சாம்பியன்களாகியிருக்கலாம் ஆனால் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு இந்த வெற்றி திருப்தி அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஓவர் வரை சென்று சமன் ஆன நிலையில் பவுண்டரிகள் எண்ணிக்கையில் முடிவு செய்யப்பட்டதையடுத்து பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தி டைம்ஸ் இதழில் மோர்கன் கூறியதாவது:

இரு அணிகளும் நெருக்கமான முறையில் சவாலாக ஆடிய போட்டி இந்த மாதிரி முடிவடைந்தது, இந்த உலகக் கோப்பையை இந்த முறையில் வென்றது நியாயமல்ல. ஆட்டத்தில் எந்த ஒரு கணத்திலும் போட்டியை இரு அணிகளும் இழக்கும் நிலை இருந்தது என்று ஒருவரும் கூற முடியாது. மிகவும் சமச்சீரான ஆட்டமாக இருந்தது. 

நான் பட்டவர்த்தனமாகவே தெரிவிக்கிறேன். என்ன நடந்ததோ அப்போது  நானும் இருக்கவே செய்தேன், எனக்குத் தெரியும். ஆனால் போட்டியின் முடிவில் நான் கையை வைக்க முடியாது. கோப்பையை வென்றதால் எனக்கு எதுவும் எளிதாகத் தெரியவில்லை. ஆனால் தோல்வியடைவது கடினம். 

நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்களே என்று கூறுவதற்கான உறுதிபடு தருணம் எதையும் உங்களால் கூற முடியாது. 

நானும் கேன் வில்லியம்சனிடம் கடந்த 2 நாட்களாக பேசி வருகிறேன். எங்கள் இருவரில் ஒருவருமே அறிவார்த்த விளக்கங்களை வந்தடைய முடியவில்லை. என்னைப்போலவே அவரும் காரணங்களை விளக்க முடியவில்லை. 

ஆனால் இது போன்ற ஒரு நெருக்கமான போட்டி இருந்திருக்குமா என்று எனக்குத் தோன்றவில்லை. பித்த நிலைதான், நான் அதை கொண்டாடக் கூடாதா?

இவ்வாறு கூறியுள்ளார் இயான் மோர்கன்.

SCROLL FOR NEXT