லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனல்ட் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்ற புகழ்பெற்றோர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆஸ்த்ரேலிய மகளிர் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் காத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் என்பவரும் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவரும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமுக்குள் நுழைந்தனர்.
ஒரு வீரர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆக வேண்டும் அப்போதுதான் ஹால் ஆஃப் ஃபேமில் நுழைய தகுதி பெற முடியும், சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில் தான் அந்தக் காலக்கெடு முடிந்தது.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற 6வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சச்சின்.
சுனில் கவாஸ்கர், பிஷன் பேடி, கபில்தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட் ஆகியோர் முன்னதாக ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்பட்ட இந்திய வீரர்களாவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின்.