விளையாட்டு

தெற்காசிய கூடைப்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

பிடிஐ

தெற்காசிய கூடைப்பந்து சங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 90-37 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வெற்றியோடு போட்டியை தொடங்கியுள்ளது.

பெங்களூரில் நேற்று நடை பெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியில் முன்னணி வீரர்க ளான அம்ருதாபால் சிங், அம்ஜோத் சிங் (இருவரும் ஜப்பானில் விளையாடி வருகின் றனர்), மூத்த வீரர் யாத்விந்தர் சிங், விஷேஷ் பிரிக்குவன்ஷி ஆகியோர் இடம்பெற வில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் அண்ணாதுரை, கர்நாடக வீரர் அரவிந்த், பஞ்சாப்பைச் சேர்ந்த இளம் வீரர் குருவிந்தர் சிங் ஆகியோரின் ஆட்டம் முன்னணி வீரர்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் அமைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களை சமாளிக்க நேபாள வீரர்கள் கடுமையாகப் போரா டினர்.

ஆனாலும் ஒவ்வொரு கால் ஆட்டத்திலும் இந்தியாவின் முன்னிலை மிக அதிகமாக இருந்தது. பின்களத்தில் ஆக்ரோ ஷமாக செயல்படுவது, பந்தை பொறுமையாக நகர்த்துவது, எளிதான ஸ்கோர் வாய்ப்பை ஏற்படுத்துவது என்ற முந்தைய பயிற்சியாளர் ஸ்காட் பிளெம் மிங்கின் உத்தியையே தற்போதைய இந்திய பயிற்சி யாளர் பிரசாத் ராமலிங்காவும் பின்பற்றி வருகிறார். இது இந்தியாவுக்கு பலமாக அமைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் வங்கதேச அணி 76-65 என்ற புள்ளிகள் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் வங்கதேசம் 39-20 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில் 2-வது பாதி ஆட்டத்தில் மாலத்தீவு ஓரளவு சிறப்பாக ஆடியது. எனினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

SCROLL FOR NEXT