விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி; யூகி பாம்ப்ரி வெற்றி

ஏஎஃப்பி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா குரூப் 1 போட்டியின் முதல் நாளில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ் 6-4, 6-4, 3-6, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸிடம் தோல்வி கண்டார்.

3 மணி நேரம், 43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை சோம்தேவ் எளிதாகக் கைப்பற்றினார். அதனால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அடுத்த 3 செட்களை இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டார்.

எனினும் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் விளையாடிய யூகி பாம்ப்ரி 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்டாட்ஹாமை தோற் கடித்தார். இதன்மூலம் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது இந்தியா.

இன்று நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சாகேத் மைனேனி ஜோடியும், நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல்-ஆர்டெம் சிடாக் ஜோடியும் மோதுகின்றன. இதில் போபண்ணா ஜோடி வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும்.

ஒருவேளை தோற்கும்பட்சத்தில் நாளை நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் சோம்தேவ், யூகி பாம்ப்ரி இருவரும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படும்.

SCROLL FOR NEXT