புதுடெல்லி
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப் பம் கோரியுள்ளது பிசிசிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ் திரி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சி யாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சி யாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இம்மாத இறுதியில் மேற்கிந் தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தத் தொடர் வரை ரவி சாஸ் திரியும் அவரது உதவியாளர்களும் பயிற்சியாளர் பதவியில் நீடிப் பார்கள். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக மேலாளர் உள்ளிட்ட பணி யாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியுள்ளது.
அனைத்து இடங்களுக்கான விண்ணப்ப காலக்கெடு வரும் 30-ம் தேதி மாலை 5 மணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி சாஸ் திரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது பயிற்சியாளருக்கான தகுதி களாக 9 விஷயங்களை பிசிசிஐ சுட்டிக்காட்டியிருந்தது. அவை அனைத்தும் கவனம் பெறாதவை யாகவும், தெளிவு இல்லாமலும் இருந்தது. ஆனால் இம்முறை பயிற்சியாளர் பதவிகளுக்கு 3 தகுதிகளை மட்டுமே நிர்ணயித் துள்ளது பிசிசிஐ.
இதன்படி தலைமை பயிற்சியா ளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் டெஸ்ட் போட்டி விளையாடும் அணிக்கு குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சி அளித்திருக்க வேண்டும். அல்லது ஐசிசி-யின் உறுப்பு நாடு களைச் சேர்ந்த அணியில் 3 வருடங் கள் பணியாற்றியிருக்க வேண்டும். இது ஏ அணியாகவும், ஐபிஎல் அணி யாகவும் இருக்கலாம். மேலும் விண்ணப்பதாரர் 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.
இதே தகுதிகள்தான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும். ஆனால் போட்டி யின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது. இந்த 3 பணிகளுக்கும் விண்ணப்பிப் பவர்கள் 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டிகளில் பங்கேற் றிருக்க வேண்டும். 60 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பதும் அவசியம்.
தற்போது பணியில் உள்ள ரவி சாஸ்திரி மற்றும் அவரது உதவியாளர்கள் தேர்வு நடைமுறை யில் நேரடியாக கலந்து கொள்ள லாம் எனவும் பிசிசிஐ தெரிவித் துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியதை தொடர்ந்து டிரெய்னர் சங்கர் பாசு, பிஸியோ பாட்ரிக் பர்ஹக் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது உள்நாட்டு சீசனை செப்டம்பர் 15-ம் தொடங்குகிறது இந்திய அணி. இதனால் இந்தத் தொடரை இந்திய அணி புதிய பயிற்சியாளரின் தலைமையின் கீழ் சந்திக்கக்கூடும். தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு 57 வயதாகிறது.
கடந்த 2017-ம் ஆண்டின் மத்தி யில் அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த தால் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரை இந்திய அணியின் இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார்.
ரவி சாஸ்திரியின் வழிகாட்டுத லில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைத்திருந்தது. ஆனால் அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்திய அணி ஐசிசி தொடரை வெல்லவில்லை. - பிடிஐ