விளையாட்டு

இதயம் உடைந்துவிட்டது: மெகுல்லம் வேதனை

செய்திப்பிரிவு

உலகக்கோப்பை முடிவு இதயத்தை உடைத்துவிட்டதாக நியூஸிலாந்து வீரர் மெகுல்லம் வேதனை தெரிவித்துள்ளார். 

நியூஸிலாந்து - இங்கிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி  முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது.

முதலில் நடைபெற்ற பிரதான போட்டியில்  நியூஸிலாந்து அடித்த 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது . இதனைத் தொடர்ந்து  நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்ஸில் அதிகமான பவுண்டரி எந்த அணி அடித்தது என்ற அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அணி அதிகமாக அடித்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.  இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.

எனினும் ஐசிசியின் முடிவு ரசிகர்கள் உட்பட  கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும்  ஐசிசியின் விதியை விமர்சித்தனர்.

இந்நிலையில்  நியூஸிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மெகுல்லம் தனது வேதனையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ''இதயம் உடைந்துவிட்டது.  நமது வாழ்கையில் மீண்டும் இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தைப் பார்க்க முடியாது.  எதிர்பாராத திருப்பங்கள்... உணர்வுகள்.. திறன்கள்.. மதிப்பு என அனைத்தும்.  நன்றி  நியூஸிலாந்து .. நன்றி இங்கிலாந்து’’ என்று மெகுல்லம் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT