விளையாட்டு

3-வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இலங்கை

செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 291 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இலங்கையின் பல்லகெலவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளில் மேலும் 6 ரன்கள் சேர்த்த நிலையில் 215 ரன்களில் ஆட்டமிழந்தது. சர்ஃப்ராஸ் அஹமது 78 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் தமிகா பிரசாத், பிரதீப், கவுசல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2-வது இன்னிங்ஸ்

63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங் கிய இலங்கைக்கு கருணா ரத்னே (10), சில்வா (3), திரிமன்னே (0) ஏமாற்றம் அளித்தனர். தரங்கா 48, முபாரக் 35 ரன்கள் எடுத்தனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 77, சண்டிமால் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை 291 ரன்கள் முன்னிலை பெற் றுள்ளது.

SCROLL FOR NEXT