தீபிகா குமாரி, ரிமில் பியூரீலி மற்றும் லஷ்மி ராணி மஜி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வில்வித்தை அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
4வது முறையாக தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் வில்வித்தை அணியினர் தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஜெர்மனி, கொலம்பியா, மற்றும் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் ரஷ்ய அணியைச் சந்திக்கின்றனர்.
ஜெர்மனியை 5-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் வில்வித்தை அணி.
ஏதென்சு ஒலிம்பிக் போட்டிகளுக்காக நியூயார்க்கில் நடைபெற்ற போட்டிகளில் வென்று 2003-ல் தகுதி பெற்றனர். பிறகு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்காக லெய்ப்சிக்கில் நடைபெற்ற வில்வித்தை போட்டிகளில் வென்று 2007-ல் தகுதி பெற்றனர். 2011-ம் ஆண்டு டூரினில் ரன்னர்களாக வந்ததோடு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர். எனவே தற்போது தொடர்ச்சியாக 4-வது முறையாக தகுதி பெற்றுள்ளனர்