விளையாட்டு

டேரில் மிட்​செல் சாதனை முதல் ராணா வேட்​டை வரை: இந்தியா Vs நியூஸி. துளிகள்

செய்திப்பிரிவு

நேற்​றைய போட்​டி​யில் 137 ரன்கள் விளாசி​யதன் மூலம் இந்தியாவுக்கு எதி​ராக 4-வது ஒரு​நாள் போட்டி சதத்தை டேரில் மிட்​செல் எடுத்து சாதனை படைத்​துள்​ளார். மேலும் கடந்த 4 போட்டிகளில் அவர் விளாசும் 3-வது சதமாகும் இது. ஒட்டுமொத்தமாக ஒரு​நாள் போட்​டிகளில் அவர் எடுக்கும் 9-வது சதமாகும் இது.

இந்​திய மைதானங்​களில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக 7 போட்டிகளில் விளை​யாடி​யுள்ள டேரில் மிட்​செல் 4 சதங்களை எடுத்​துள்​ளார். இந்த வரிசை​யில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டி​வில்​லியர்ஸ் இந்தியா​வில் 11 போட்டிகளில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக விளை​யாடி 5 சதங்களை விளாசி முதலிடத்​தில் இருக்​கிறார். அதுமட்டுமல்லாமல், இந்​திய மைதானங்​களில் அதிக சதம் (4சதங்கள்) விளாசிய நியூஸிலாந்து வீரர்​கள் வரிசை​யில் டேரில் மிட்​செல் 2-வது இடத்​தில் உள்​ளார்.

இந்த வரிசை​யில் நியூஸிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே 5 சதங்களுடன் முதலிடத்​தி​லும், 3 சதங்​களு​டன் கிறிஸ் கெயின்ஸ் 3-வது இடத்​தி​லும், 3 சதங்​களு​டன் ராஸ் டெய்​லர் 4-வது இடத்திலும் உள்​ளனர். பிலிப்ஸ் 2-வது சதம்: நேற்றைய போட்டியில் சதம் விளாசி​யதன் மூலம் சர்​வ​தேச ஒரு நாள் போட்டிகளில் தனது 2-வது சதத்தை நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் எடுத்​துள்​ளார்.

கான்​வேயை 3 முறை வீழ்த்​திய ராணா

நடப்பு ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் நியூஸிலாந்து வீரர் டேவன் கான்​வேயை, இந்​திய வீரர் ஹர்​ஷித் ராணா 3-வது முறை​யாக ஆட்ட​மிழக்​கச் செய்​துள்​ளார்.

இந்​தத் தொடரில் இது​வரை 3 போட்​டிகளில் 23 பந்​துகளை டேவன் கான்​வேவுக்கு வீசி​யுள்ள ராணா, 3 முறை அவரது விக்கெட்டை எடுத்​துள்​ளார். அவரது ஓவரில் 18 ரன்​களை மட்டுமே எடுத்​துள்ள கான்வே 3 முறை ஆட்டமிழந்துள்ளார்.

அதிக முறை 50 பிளஸ் ஸ்கோர்

ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் இந்​திய அணிக்கு எதிராக தொடர்ச்​சி​யாக அதி​கம் முறை 50 அல்​லது அதற்கு அதி​க​மான ஸ்கோரைக் குவித்​தவர்​கள் வரிசை​யில் டேரில் மிட்​செல் 2-வது இடத்​தில் உள்​ளார்.

நேற்​றைய போட்​டி​யுடன் அவர் 4 முறை தொடர்ச்​சி​யாக 50 அல்​லது அதற்கு அதி​க​மான ஸ்கோரை இந்​திய அணிக்கு எதி​ராக எடுத்துள்ளார். இந்த வரிசை​யில் நியூஸிலாந்து வீரர்​கள் கேன் வில்​லி​யம்​ஸன் 5 முறை​யுடன் (2014-ம் ஆண்​டு) முதலிடத்​தி​லும், கிளென் டர்​னர் 3 முறை​யுடன் 3-வது இடத்​தி​லும்​(1975-76), ஸ்டீபன் பிளெமிங் 3 முறை​யுடன் 4-வது இடத்​தி​லும்​(1994-95), ரோஜர் டுவோஸ் 3 முறை​யுடன் 5-வது இடத்​தி​லும்​(1999), ராஸ் டெய்​லர் 3 முறை​யுடன் 6-வது இடத்​தி​லும்​(2019-20) உள்​ளனர்.

14 போட்​டிகளில் 26 விக்கெட்கள்

இந்​திய அணிக்​காக முதல் 14 போட்​டிகளில் விளை​யாடி 26 விக்கெட்களை ஹர்​ஷித் ராணா வேட்​டை​யாடி​யுள்​ளார். இதன்​மூலம் முதல் 14 போட்​டிகளில் அதிக விக்​கெட்​களை வேட்டையாடிய இந்​திய வீரர்​கள் வரிசை​யில் அவர் 3-ம் இடத்​தில் உள்​ளார்.

இந்த வரிசை​யில் முதல் இடத்​தில் அஜித் அகர்​கரும் ​(32 விக்கெட்கள்), 2-வது இடத்​தில் இர்​பான் பதானும் ​(27 விக்கெட்கள்), 4-ம் இடத்​தில் பிரசித் கிருஷ்ணா​வும் (25 விக்கெட்கள்), 5-ம் இடத்​தில் ரவிச்​சந்​திரன் அஸ்​வினும் (24 விக்கெட்கள்), 6-ம் இடத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வும் (24 விக்கெட்கள்) உள்​ளனர்.

SCROLL FOR NEXT