விளையாட்டு

உலக பள்ளிகள் அளவிலான பீச் வாலிபால்: வெண்கலம் வென்ற தமிழக மாணவர்கள்

கரு.முத்து

கடந்த மாதம் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் நடந்த உலக பள்ளிகள் அளவிலான பீச் வாலிபால் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணி களில் 3 அணிகள் வெண்கலப் பதக்கங்களை வென்று திரும்பி யுள்ளன. இந்திய அணிகள் என்று குறிப்பிட்டாலும் அதில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒரு மாண வரைத் தவிர மற்ற அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆண்டு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய பள்ளிகள் பீச் வாலிபால் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாண வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 அணிகளும், மாணவிகளைக் கொண்டு 2 அணிகளும் உலக அளவில் நடக்க இருந்த போட்டி களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மாணவர்கள் அணியில் ஹைதராபாத்தை சேர்ந்த கிஷோர் ரெட்டி என்ற மாணவரைத் தவிர மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன். மாணவிகள் அணிக்கு பயிற்சியாளர் முட்டம் அரசு மேனிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை கலா. இருவரும் தம்பதியர்.

பிரேசில் சென்று வெற்றி பெற்று வந்த அனுபவத்தை அவர்கள் இருவரும் ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டனர். “உலக அளவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. மற்ற நாட்டு அணிகளுக்கு ஏற்கெனவே 2 முறை உலகப் போட்டியில் வென்ற அனுபவம் இருந்தது. அதனால் அவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுலபமாக விளையாடி னார்கள். ஆனால், நமது அணியில் அத்தனை பேருக்கும் வெளிநாடு சென்றதும், இப்படி ஒரு போட்டி யில் கலந்துகொண்டதும் இதுதான் முதல்முறை. ஆனாலும் அதை யெல்லாம் பொருட்படுத்தாமல் சிறப்பாக விளையாடி சாதித்திருக் கிறார்கள்.

மொத்தம் 5 அணிகள். அதில் 3 பிரிவுகளில் ஆடிய 3 ஆடவர் அணிகளும் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றன. அதேபோல் 2 பிரிவுகளில் விளை யாடிய மாணவிகள் அணி ஒரு பிரிவில் உலக அளவில் 4-வது இடத் தையும், இன்னொரு அணியினர் 6-வது இடமும் பிடித்துள்ளனர்.

இன்னும் ஓராண்டு இம்மாணவர் களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிப் பதன் மூலம் அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடக்கும் உலக பள்ளிகள் பீச் வாலிபால் போட்டி யில் நிச்சயம் நமது தமிழக மாணவர் களைக் கொண்ட இந்திய அணி யினர் தங்கப் பதக்கம் வெல் வார்கள்” என்று உறுதியுடன் தெரிவித்தனர்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்தாண்டு விளை யாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக் கிய ரூ.10 கோடி நிதிதான் பீச் வாலி பால் போட்டிகளுக்கு புதிய உத்வே கத்தை கொடுத்துள்ளது என்பது பயிற்சியாளர்களின் கருத்து.

SCROLL FOR NEXT