1960-ல் நடைபெற்ற ரோம் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி கோலடித் தவரான சைமன் சுந்தர்ராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஜிவிஎஸ்பிஎல்-டிஎன்எஸ்ஜேஏ (தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகை யாளர் சங்கம்) சார்பில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்ட சைமன், “எனக்கு இந்த விருதை வழங்கியதற்காக ஜிவிஎஸ்பிஎல் மற்றும் டிஎன்எஸ்ஜேஏவுக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பல்வேறு விருதுகளைப் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.
சர்வதேச வாலிபால் வீரர் நவீன் ராஜா ஜேக்கப்புக்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதும், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருதும் வழங்கப்பட்டன. பத்திரிகையா ளருக்கான வாழ்நாள் சாதனை யாளர் விருது, ‘தி இந்து’வின் இணையாசிரியர் எஸ்.தியாக ராஜனுக்கு வழங்கப் பட்டது. தமிழக வாலிபால் அணியின் பயிற்சியாளர் பி.சுந்தரத்திற்கு ஆண்டின் சிறந்த பயிற்சியாளருக்கான விருதும், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சாம் பியன் பட்டம் வென்ற தமிழக கூடைப்பந்து அணிக்கு ஆண்டின் சிறந்த அணிக்கான விருதும் வழங்கப்பட்டன. தமிழக செஸ் வீரர் அரவிந்த் சிதம்பரம், டென் னிஸ் வீராங்கனை சிநேகா தேவி ரெட்டி ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.
ஏ.அரவிந்த், எஸ்.பிரசன்ன வெங் கடேஷ் (கூடைப்பந்து), பி.சுதாகர், ஏ.ரீகன் (கால்பந்து), பி.தீபிகா, ஜே.ஹேமாஸ்ரீ (தடகளம்), ஆர்.பிரக் ஞானானந்தா (செஸ்), எம்.ஷாரூக்கான் (கிரிக்கெட்), எஸ்.நிகில் (டேபிள் டென்னிஸ்), டி.சத்ரியன் (வாலிபால்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜிவிஎஸ்பிஎல் நிறுவனத்தின் தூதரான இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். டிஎன்எஸ்ஜேஏ தலைவர் டி.என்.ரகு அனைவரையும் வரவேற்று பேசினார். செயலாளர் கே.கீர்த்திவாசன் நன்றி கூறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான சுமந்த்.சி.ராமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.