லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஜோடி சீனாவின் சாய் சாய் ஜெங், கஜகஸ்தானின் ஸாரினா டியாஸ் ஜோடியை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அனா இவானோவிக், அமெரிக் காவின் மாட்டெக்கிடம் தோற்று வெளியேறினார்.
செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, விக்டோரியா அஸரென்கா, ஸாரினா டியாஸ், ஆண்ட்ரியா பெட்கோவிக், லூஸி சபரோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் பிரிவில் வாவ்ரிங்கா, ரயோனிக், ஆண்டிர முர்ரே, லியானர்டோ மேயர், மரின் சிலிச், ஜான் ஐஸ்னர், சான்டியாகோ கிரால்டோ, டேவிட் காபின் ஆகி யோர் 3-வது சுற்றுக்கு முன் னேறினர்.
விம்பிள்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கடும் வெப்பநிலை நிலவியது. 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனால், வீரர், வீராங்கனைகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பந்து எடுத்துப் போடும் சிறுவன் ஒருவன் மயக்கமடைந்து விழுந்தான். அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விம்பிள்டன் மைதானத்தில் ஒரு பகுதியில் தீ அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால் அனைவரும் சிறிது நேரம் வெளி யேற்றப்பட்டனர்.