விளையாட்டு

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து மாற்றமா?- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுப்பு

செய்திப்பிரிவு

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து மெல்போர்னிலேயே நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதி ‘பாக்ஸிங் டே’ஆகும். அந்த நாளில் தொடங்கும் டெஸ்ட் போட்டியை ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி என அழைக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் ‘பாக்ஸிங் டே’ அன்று தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு எப்போதுமே மிகுந்த வரவேற்பு உண்டு. அந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மைதானத்தில் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இப்போது ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியை நடத்துவதில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மாகாணங்க ளிடையே போட்டி நிலவுகிறது. அதனால் அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் மாகாணத்துக்கு ‘பாக்ஸிங் டே’ போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். மெல்போர்னில் இருந்து ‘பாக்ஸிங் டே’ போட்டி மாற்றப்படலாம் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் ஊடகங்களில் வெளி யான செய்தியை முற்றிலும் மறுத் துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பொது மேலாளர் (செயல் பாடுகள்) மைக் மெக்கென்னா கூறியதாவது: ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி மாற்றப்படலாம் என வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அப்படியொரு திட்டம் எங்களிடம் இல்லை. ‘பாக்ஸிங் டே’ போட்டி மெல்போர்னிலேயே தொடர்ந்து நடத்தப்படும்.

மற்ற வர்த்தக தொழில்வாய்ப்பு களை போலவே கிரிக்கெட்டின் மூலமாக நிதி திரட்டுவதில் கவனம் செலுத்துகிறோம். யாராவது எங்களிடம் வந்து பெரிய சலுகை தருவதாகக் கூறினால் அதை கவனமாக கேட்போம்.

ஆனால் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் நடத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப் படும். ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் இருந்து மாற்றுவதற்காக மற்ற மாகாணங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை என்றார்.

SCROLL FOR NEXT