ரூ.1,700 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப் படும் 16 அந்நிய செலாவணி மோசடி வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி உள்ளிட்டோருக்கு இறுதி அபராத நோட்டீஸை அனுப்புவதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது அமலாக்கப் பிரிவு இயக்குனரகம்.
ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு இயக்குனரக மேல்மட்ட வட்டாரங்கள் கூறுகையில், “ஏற்கெனவே இருக்கும் 16 வழக்குகள் மட்டுமின்றி, அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதோடு, ஹவாலா பணபரிவர்த்தனையில் மோடி உள்ளிட்டோர் ஈடுபட்டிருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அது தொடர்பாகவும், அதில் மோடியின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கிரிக்கெட் ஊடக உரிமைக்காக பிசிசிஐயால் ஒதுக்கப்பட்ட நிதியில் லலித் மோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய 16 அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லலித் மோடி மற்றும் ஐபிஎல்-பிசிசிஐயைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விரைவில் இறுதி அபராத நோட் டீஸ் அனுப்பப்படும்.
16 வழக்கு களில் ரூ.1700 கோடிக்கு அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகக் கணக் கிடப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு மோசடி நடந்த தொகை யின் அளவைப் போன்று 3 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்” என தெரிவித்தன.