தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க்,
ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர்.
தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' ஷோயப் அக்தர் பெயரைக் குறிப்பிட்டார் மைக்கேல் கிளார்க்.
ஆனால் தான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் பெயரைக் குறிப்பிட்டார் அவர்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில் மைக்கேல் கிளார்க் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.