விளையாட்டு

மான நஷ்ட ஈடாக ரூ.10 கோடி கேட்டு பத்ராவுக்கு ஐஓஏ தலைவர் ராமச்சந்திரன் நோட்டீஸ்

பிடிஐ

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவர் என். ராமச்சந்திரன் அந்தப் பதவியில் தொடர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி ரூபாய் தருவதாக இன்னொருவர் மூலமாக என்னை அணுகினார் என ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா குற்றம்சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து எனது புகழுக்கும் நற்பெயருக்கும் பங்கம் விளைவித்துவிட்டீர்கள். அதற்கான மான நஷ்ட ஈடாக ரூ.10 கோடி தர வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் எனக்கூறி பத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் என்.ராமச்சந்திரன்.

பத்ரா என் மீது கூறிய குற்றச் சாட்டு முற்றிலும் தவறானதாகும். அதற்கான நஷ்ட ஈடாக ரூ.10 கோடியை 15 நாட்களுக்குள் தர வேண்டும். இதுதவிர என் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பத்ராவிடம் கேட்டபோது, “ராமச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியிருந்தால் அதில் மகிழ்ச்சியே. நான் அவரு டைய கோரிக்கையை ஏற்கப் போவதில்லை.

எனது வக்கீல் அவருக்கு பதில் அளிப்பார். நீதி மன்றத்தில் வழக்கு தொடருங்கள். அங்கு நாம் சந்திக்கலாம் என்பதை ராமச்சந்திரனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ராமச்சந்திரன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆடியோ மற்றும் வீடியோ ஆதா ரங்கள் உள்ளன. அவர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தால், அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அங்கு ஒப்படைப்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT