விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசம் அதிரடி தொடக்கம்

செய்திப்பிரிவு

மிர்பூரில் நடைபெறும் இந்திய-வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்து வரும் வங்கதேசம் அதிரடி தொடக்கம் கண்டுள்ளது.

8 ஓவர்கள் முடிவில் அந்த அணி 66 ரன்களுக்கு விக்கெட் இழக்கவில்லை. தமிம் இக்பால் 25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்களுடனும், சவுமியா சர்க்கார் 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

பிட்சில் மருந்துக்குக் கூட ஒன்றும் இல்லை. விளாசல் பிட்ச். இதில் உமேஷ் யாதவ் பந்து ஒன்று தமிம் இக்பாலின் அரிதான எட்ஜைத் தொட்டுச் செல்ல, விநோதமான, சற்றே வைடாக நிற்த்தப்பட்ட ஸ்லிப் திசையில் தவனுக்கு சற்று முன்னால் பந்து விழுந்து பீல்டிங்கையும் கோட்டைவிட பவுண்டரிக்குப் பறந்தது. அதே ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார் தமிம்.

உமேஷ் யாதவ் பந்தை மேலேறி வந்து கவர் திசையில் சிக்ஸ் தூக்கினார் தமிம்.

இந்திய அணியில் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரெய்னா, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா விளையாடுகின்றனர்.

10 ஓவர்களுக்குள்ளேயே 4 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றால் பிட்சின் நிலவரம் என்னவென்பது நமக்கு புரிகிறது.

SCROLL FOR NEXT