ஸ்விட்சர்லாந்தின் லாசனில் அடுத்த வாரம் நடைபெற வுள்ள சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) கூட்டத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவியை ராஜி னாமா செய்த செப் பிளேட்டர் பங்கேற்கமாட்டார் என பிஃபா தெரிவித்துள்ளது. அதை பிஃபா செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.
உலகின் செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்பான பிஃபாவில் நிகழ்ந்த ஊழலால் அதன் முக்கிய நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பிஃபாவுக்கு கடும் நெருக்கடிக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் அசராத பிளேட்டர், அடுத்த 2 நாட்களில் பிஃபா தேர்தலில் போட்டியிட்டு 5-வது முறையாக தலைவர் ஆனார்.
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிஃபாவில் நடந்த ஊழல் தொடர்பாக பிளேட்டரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.