விளையாட்டு

மெக்கல்லம் விலகல்

பிடிஐ

ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் களில் இருந்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் களைப்படைந்துள்ள மெக்கல்லம் மேற்கண்ட தொடர் களில் இருந்து விலகியிருக்கிறார்.

மெக்கல்லம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறலாம் என தகவல் வெளியாகியிருந்தது. அது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கிளம்பின.

ஆனால் இப்போது மெக்கல்லம் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை நியூஸிலாந்துக்கு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT