விளையாட்டு

நார்த் ஈஸ்ட் அணியில் ஷிமாவ்

பிடிஐ

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2--வது சீசனில் விளையாடவுள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியில் போர்ச்சுகல் முன்னாள் வீரர் ஷிமாவ் சப்ரோஸா சேர்க்கப்பட்டுள்ளார்.

2004 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியவரான ஷிமாவ் ‘மார்க்கீ’ வீரராக இடம்பெற்றுள்ளார். அட்லெடிகா மற்றும் பார்சிலோ அணிகளில் மிட்பீல்டராக விளையாடிய ஷிமாவ், நார்த் ஈஸ்ட் அணிக்காக எண் -20 பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை அணிந்து விளையாடுவார் என அந்த அணி சார்பில் சமூக வலைதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT