விளையாட்டு

கனடா ஓபன்: இந்தியாவின் ஜுவாலா - அஸ்வினி ஜோடி சாம்பியன்

பிடிஐ

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-19, 21-16 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நெதர்லாந்தின் ஈஃப்ஜி முஸ்கென்ஸ்-செலீனா பீக் ஜோடியைத் தோற்கடித்தது.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட் ஒரு கட்டத்தில் 19-19 என்ற கடும் சவாலில் இருந்தது. எனினும் அடுத்த இரு கேம்களில் வென்ற ஜுவாலா-அஸ்வினி ஜோடி அந்த செட்டை கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி ஒரு கட்டத்தில் 10-6 என்ற கணக்கிலும், பின்னர் 15-6 என்ற கணக்கிலும் முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த கேமில் இருந்து சுதாரித்துக் கொண்ட நெதர்லாந்து ஜோடி தொடர்ச்சியாக 9 கேம்களை வெல்ல 15-15 என்ற சமநிலை ஏற்பட்டது. இதன்பிறகு அபாரமாக ஆடிய இந்திய ஜோடி அடுத்த 7 கேம்களில் 6-ஐ வென்று போட்டியை வெற்றியில் முடித்தது.

ஊக்கம் அளிக்கிறது

வெற்றி குறித்து கல்கேரியில் இருந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அஸ்வினி கூறியிருப்பதாவது:

இது மிகச்சிறப்பான வெற்றி. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறோம். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக நடை பெற்ற இந்தப் போட்டியில் வென்றி ருப்பது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெறுவது தான் எங்களுடைய அடுத்த இலக்கு.

கடந்த ஆண்டும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் ஷிப், உபர் கோப்பை, ஆசிய கோப்பை ஆகியவற்றில் வெண் கலப் பதக்கமும், கிளாஸ்கோ காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றோம். தொடர்ச்சியாக சிறப்பாக விளை யாடி வந்த நாங்கள் இப்போது சாம்பியன் பட்டம் வென்றிருக் கிறோம். இதன்மூலம் நீண்டகால மாக சாம்பியன் பட்டம் வெல்ல வில்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறோம் என்றார்.

உலக சாம்பியன்ஷிப்

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தனித்தனியாக பயிற்சி பெற்று வந்த ஜுவாலாவும், அஸ்வினியும் உலக சாம்பியன்ஷிப் போட்டியை கருத்தில் கொண்டு மீண்டும் ஒன்றாக இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

அது தொடர்பாக பேசிய அஸ்வினி, “நாங்கள் இரு வரும் தனித்தனியாக பயிற்சி பெற்றா லும், நாங்கள் இருவரும் ஏற்கெனவே நிறைய போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளை யாடியிருக்கிறோம். அதனால் எனக்கு ஜுவாலாவின் ஆட்டத்தைப் பற்றியும், ஜுவாலாவுக்கு என்னு டைய ஆட்டத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். எனவே சிறப்பாக ஆடுவதில் பிரச்சினை இருக்காது. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராவதற்காக ஜுவாலா பெங்களூர் வருகிறார். அங்கு நாங்கள் இருவரும் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவோம்” என்றார்.

தரவரிசை கவலையில்லை

தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதன் மூலம் ஜுவாலா-அஸ்வினி ஜோடி தரவரிசையில் 13-வது இடத்துக்கு முன்னேறி யிருக்கிறது. இதுவே அவர் களுடைய சிறந்த தரவரிசையாகும். இந்த நிலையில் இப்போது கனடா ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பதன் மூலம் அவர்களுடைய தரவரிசையில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அஸ்வினி, “கடந்த இரு வாரங்கள் சிறப்பானதாக அமைந்தன. அதனால் வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட தீவிரம் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். மாறாக தரவரிசையைப் பற்றி கவலைப்படுவதில்லை. சிறப்பாக ஆடி வெற்றி பெறும்போது தரவரிசை தானாகவே உயரும்.

தற்போதைய நிலையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளோம். இந்த ஆண்டு ஒலிம்பிக் ஆண்டாகும். அதனால் சூப்பர் சீரிஸ் போட்டி மட்டுமின்றி நிறைய கிராண்ட்ப்ரீ மற்றும் கிராண்ட்ப்ரீ கோல்டு போட்டிகளில் விளையாட முயற்சிப்போம்” என்றார்.

SCROLL FOR NEXT