விளையாட்டு

மே.இ.தீவுகள் 148-க்கு ஆல்அவுட்

செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள்-ஆஸ்தி ரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளின் ரொசாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 53.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 36 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஜான்சன், ஹேஸில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. வோஜஸ் 26, வாட்சன் 7 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

SCROLL FOR NEXT