சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் 21-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பூவம்மா, ஜோசப் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
2-வது நாளான நேற்று நடைபெற்ற மகளிர் 400 மீ. ஓட்டத்தில் 53.07 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார் பூவம்மா. சீனாவின் யாங் ஹியூஸென் (52.37) தங்கமும், கஜகஸ்தானின் அனாஸ்டாஸியா (53.41) வெண்கலமும் வென்றனர். பூவம்மா, கடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிர் 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் லிசிக்கி ஜோசப் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஐ