விளையாட்டு

அனெல்காவை தக்கவைத்தது மும்பை சிட்டி எப்.சி. அணி

பிடிஐ

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளை யாடி வரும் மும்பை சிட்டி எப்.சி. அணி, கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் முன்கள வீரர் நிகோலஸ் அனெல்காவை தக்கவைத்துக் கொண்டது.

கடந்த ஐஎஸ்எல் சீசனின் சிறந்த வீரர்களில் 5-வது வீரரான அனெல்கா, மும்பை அணிக் காக இரு கோல்களை அடித்ததோடு, இரு கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அனெல்கா 69 சர்வதேச போட்டி களிலும், கிளப் அளவிலான 500 போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

இது தொடர்பாக மும்பை அணியின் உரிமையாளர் ரன்பீர் கபூர் கூறுகையில், “அனெல் காவை தக்க வைத்துக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சீசனில் எங்கள் அணிக் காக அவர் சிறப்பாக ஆடினார். இந்த சீசனிலும் சிறப்பான, வலுவான அணியை களமிறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய சிலரை தக்கவைத்துக் கொள்வது முக்கியம். அதில் அனெல்கா குறிப்பிடத்தக்கவர்.

மும்பை அணிக்காக 2-வது சீசனில் விளையாடவிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அனெல்கா, “கடந்த சீசனில் மிகவும் ரசித்து விளையாடினேன்.

வரும் சீசனில் மும்பை அணிக்காக விளையாடவும், இளம் ரசிகர்களை குஷிப்படுத்தவும் தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். எல்லோரும் கால்பந்து விளையாடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT