இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், 2016 ஒலிம்பிக் போட்டி வரை தனது பயிற்சிக்கு உதவியாக முழுநேர முடநீக்கியல் நிபுணரை (பிசியோதெரபிஸ்ட்) நியமித்துக் கொள்வதற்காக ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.
இந்த மாதத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டி வரையிலான 15 மாத காலத்துக்கு இந்த 9 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. அதன்படி சாய்னாவின் முடநீக் கியல் நிபுணருக்கு மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். முடநீக்கியல் நிபுணரை சாய்னாவே தேர்வு செய்துகொள்ளலாம் என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2016 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடிய வாய்ப் புள்ளவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியி லிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சாய்னாவும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னா நெவால், தற்போது பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். ஒலிம்பிக் போட்டி வரை அங்கு பயிற்சியை தொடரவுள்ளார்.