இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் காஷ்யப் தோல்வியடைந்தார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் காஷ்யப் 21-12, 17-21, 19-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த ஜப்பானின் மொமோட்டா கென்டோவிடம் தோல்வி கண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்யப்பும், கென்டோவும் மோதியுள்ளனர். இதற்கு முந்தைய சந்திப் பிலும் கென்டோவே வென்றி ருந்தார். முன்னதாக காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் சென்லாங்கை காஷ்யப் வீழ்த்தியிருந்ததால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் முதல் செட்டை கைப்பற்றிய காஷ்யப் பால், அடுத்த செட்களில் தாக்குப்பிடித்து ஆட முடிய வில்லை.