விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

ஆடவர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் பிலி்ப் கோல்ஸ்கிரைபரை, செர்பியாவின் ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

அதேபோன்று, ஸ்விட்சர் லாந்தின் ரோஜர் பெடரர், போஸ்னியாவின் டாமிர் ஸும்குரையும், பிரிட்டனின் ஆண்டி முர்ரே கஸகஸ்கானின் மிகெயல் குகுஸ்கின்னையும், ஸ்பெயினின் நடால் பிரேசிலின் தாமஸ் பெல்லுக்கியையும் எதிர் கொள்கின்றனர்.

மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவிலன் மகரிட்டா காஸ்பார்யனை எதிர்கொள்கிறார்.

செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸையும், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பிரிட்டனின் ஜோஹன்னா கொன்டாவையும் எதிர்கொள்கின்றனர்.

இந்த ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டித் தரவரி சையில் ஜோகோவிச் முதலி டத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் முதலி டத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT